போடிநாயக்கனூர் நகராட்சியில் மக்களை தேடி நகராட்சி நகர்மன்ற தலைவர் தலைமையில் சிறப்பு முகாம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 100 ஆண்டுகள் முடிவடைந்ததை யொட்டி மக்களைத் தேடி நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கத் தலைமையில் நகராட்சி முகாம் நடைபெற்றது
நகராட்சி ஆணையாளர் எஸ் பார்கவி முன்னிலை வகித்தார் இந்த திட்டத்தின் கீழ் நகரில் உள்ள 33 வார்டுகளில் 15 நாட்களுக்கு ஒரு முறை ஒவ்வொரு வார்டாக தேர்வு செய்து அந்த வார்டு பகுதி அனைத்து மக்களின் கோரிக்கை மற்றும் அடிப்படை வசதிகள் ஆகிய பணிகளை நிறைவேற்றி தர முடிவு செய்யப்பட்டுள்ளது
இதன் ஒரு பகுதியாக போடி நகராட்சி 7 ஆவது வார்டில் அந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சாக்கடைகளில் அடைப்பு நீக்கப்பட்டு உடனடியாக சரி செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டது
மேலும் வாறுகால்கள் தூர்வாரப்பட்டு குப்பைகள் அகற்றப்பட்டது தெருக்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன அந்தப் பகுதியில் புதிதாக வீடு கட்டுவது தொடர்பான புகார் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது
மேலும் பொது மக்களின் அடிப்படை தேவையான தெருவிளக்குகள் சரியாக எரிகறதா என ஆய்வு செய்யப்பட்டு தெரு விளக்குகள் எரியாத தெருக்களில் தெருவிளக்குகள் சரியாக எரிவதற்கு உண்டான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது மேலும் ஒவ்வொரு வீடாக சென்று பொது மக்களின் கோரிக்கைகளை அதிகாரிகள் கேட்டறிந்து
அந்த கோரிக்கைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களுக்கு நகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்தார்கள் இந்த சிறப்பு முகாமில் நகராட்சி பொறியாளர் வி குணசேகரன் மேலாளர் முனிராஜ் கட்டிட ஆய்வாளர் சுகதேவ் சுகாதார அலுவலர் மணிகண்டன் சுகாதார ஆய்வாளர்கள் திருப்பதி சரவணன் அகமது பீர் உள்பட நகராட்சி அதிகாரிகள் நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் வார்டு பொதுமக்கள் உள் பட பலர் கலந்து கொண்டனர். நகராட்சி நகர் மன்ற உறுப்பினரும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான எம் சங்கர் நன்றி கூறினார்