விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் அருகே சாமி தரிசனத்திற்கு இடையூறாக கட்டப்பட்டிருக்கும் வணிக வளாகம் மற்றும் மண்டபத்தை அகற்ற உயர் நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அகற்றாமல் காலதாமதம் செய்து வரும் வருவாய்த்துறையை கண்டித்து ஊர் தலைவர்
து. துரைபாலன் தலைமையில் நாட்டான்மை முருகேசன் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சுமார் நூற்று க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். அரசு புறம் போக்கு நிலத்தில் கட்டப்பட்டுள்ளது என்று தெரிந்தும் அகற்ற மறுக்கும் வருவாய்துறையே உடனே நடடிவக்கை எடுத்திடுக, சுந்தரராஜபுரம் பகுதிகளில் உள்ள நீர்பிடிப்பு பகுதியில் கட்டப்பட்டிருக்கும் வீடுகளையும் அகற்றிடுக என முழக்கமிட்டனர்.
அகற்ற முன்வரவில்லையெனில் வரும் 21 ஆம் தேதி சேத்தூர் புறக்காவல் நிலையம் எதிரே தென்காசி நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடைபெறுமென கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது அறிவிக்கப்பட்டது. சேத்தூர் ஊரக காவல் ஆய்வாளர் புறக்காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முருகராஜ் உள்ளிட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.