செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவிலில் முதலாழ்வார்கள் நட்சத்திர விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முதலாவதாக ஸ்ரீ ராமகிருஷ்ண பிரபந்த இன்னிசைக் குழு தலைவர் மாம்பட்டு பெ. பார்த்திபன் தலைமையில் திவ்யப் பிரபந்த இன்னிசை பாடல்கள் பாடப்பட்டது. நிகழ்விற்கு சார்பதிவாளர் சு.ரமேஷ், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தபேலா இசைக் கலைஞர் ஜாபருல்லாகான் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக, புரிசை தெருக்கூத்து கலைஞர் கலைமாமணி சுப்பிரமணிய தம்பிரான் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். மேலும் இசைத் துறையில் சேவையாற்றிய இசைக் கலைஞர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மிருதங்க இசைக் கலைஞர் ஜேம்ஸ், கீபோர்டு சந்தோஷ், சமூக ஆர்வலர் ராமச்சந்திரன், விஜயலட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியில் இந்து சமய அறநிலையத் துறை கோபி நன்றி கூறினார்.