புழல் அம்பேத்கர் தெருவில் உள்ள தனியார் பள்ளியில் பணம் 15 ஆயிரம் ரூபாய் ஒரு லேப்டாப் இரண்டு செல்போன் திருட்டு போலீசார் விசாரணை.
செங்குன்றம் செய்தியாளர்
புழல் டாக்டர் அம்பேத்கர் தெருவில் தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது .
இந்த பள்ளியில் வழக்கம்போல் இன்று காலையில் ஆசிரியை , ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பள்ளிக்கு வந்து பார்த்தபோது பள்ளியின் அலுவலக முன் பக்க கதவுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அலுவலகம் உள்ளே சென்று பார்த்தபோது
பணம் வைக்கும் பீரோவும் உடைக்கப்பட்டு கதவுகளும் உடைக்கப்பட்டிருந்தது . இச்சம்வபம் குறித்து பள்ளியின் துணை முதல்வர் மணிக்கு தெரிவிக்கப்பட்டது.
அதன்பின் நிர்வாகிகள் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 51 ஆயிரம் பணமும், ஒரு லேப்டாப், இரண்டு செல்போன்களும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளதை கண்டு அதிர்ச்சியுற்றனர். உடனே இச்சம்பவம் குறித்து துணை முதல்வர் மணி புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரை பெற்றுக்கொண்ட புழல் குற்றப்பிரிவு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பெருந்துறை முருகன் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து , சம்பவ இடத்திற்கு போலீசாருடன் சென்று பள்ளியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை வைத்தும் மேலும் சில கேமராக்களை ஆய்வு செய்தும் பணம் திருடிய மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகிறார்.
மேலும் இந்த பள்ளியில் இரவு நேர காவலர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் நெருக்கமாக உள்ள இந்த பகுதியில் பள்ளியில் திருடு போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.