சபரிமலை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் விடுமுறைக்கு மும்பை – நெல்லை வழி பன்வெல், மட்காவ், மங்களூர், கொல்லம், புனலூர், தென்காசி, அம்பை இடையே சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என கராத்தே முருகன், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தல்
சபரிமலை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் விடுமுறைக்கு மும்பை – தென்தமிழகம் இடையே சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும்; ரயில் எண் 11021 தாதர் – நெல்லை சாளுக்கியா எஸ்பிரெஸ்யை சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பை, பாவூர்ச்சத்திரம், தென்காசி, செங்கோட்டை வரை நீடிக்க வேண்டும் என கராத்தே முருகன், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ அவர்களை அவர்களை சந்தித்து மனு அளித்து விளக்கியுள்ளார்.
அந்த மனுவில் கேரளா சிறப்பு ரயில் எண்: 22113 எல் டி டி – கொச்சுவேலியை நாகர்கோயில் வழியாக நெல்லை வரை நீடிக்க வேண்டும்; ரயில் எண்: 16339 மும்பை – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (தர்மாவரம், ஹிந்தாப்பூர், கிருஷ்ண ராஜபுரம் வழி) 4 மாநில வழியாக செல்கிறது. மும்பையில் 80 – 90 லட்ச தென்னிந்திய மக்கள் வாழ்கிறார்கள் இதில் தமிழர்கள் மட்டுமே 25 லட்ச மக்களுக்கு மேல் மும்பையில் வாழ்கிறார்கள் பொதுமக்கள் நலன் கருதி இந்த ரயிலை தினசரி இயக்க வேண்டும். மேலும் 8:30 மணிக்கு புறப்படும் நேரத்தை மாற்றி காலை 8 மணிக்கு இயக்க வேண்டும். ரயில் எண்: 11301 மும்பை – பெங்களூரு உதயன் எக்ஸ்பிரஸ் சேலம் வரை நீடிக்க வேண்டும்.
ரயில் எண்: 22159 மும்பை – சென்னை ரயிலை நெல்லை வரை நீட்டிக்க வேண்டும்.
மும்பை – சென்னை -திருச்சி மதுரை -நெல்லை -கன்னியாகுமரி வழித்தடத்தில் வந்தேபாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் இயக்க வேண்டும். மும்பை -தமிழ்நாட்டுக்கு ராஜதானி, ஹம்சபார், கரிப்ரத் போன்ற அதிவேக, ஏசி ரயில்களை இயக்க வேண்டும்.
ரயில் எண்: 12619 & 12133 மும்பை – மங்களூரு ரெயிலை ராமேசுவரம் வரை (வழி பாலக்காடு ,பொள்ளாச்சி, பழனி, மதுரை நீட்டித்து) வாரத்தில் 4 நாட்களுக்கும், மற்ற 3 நாட்கள் நெல்லை /தூத்துக்குடி வரையும் நீட்டித்து இயக்க வேண்டும். நெல்லை /தூத்துக்குடி வரை நீட்டிக்கப்படும் ரெயில் கொல்லம், செங்கோட்டை, தென்காசி, அம்பை, சேரன்மகாதேவி வழியாக இயக்கப்பட வேண்டும், ரயில் எண்: 16381 மும்பை -கன்னியாகுமரி ரயிலை பழைய வழித்தடத்தில் கன்னியாகுமரி -புனே க்கு பதிலாக மும்பை வரை இயக்க வேண்டும் , ரயில் எண்: 01143 மும்பை -தூத்துக்குடி ரயிலை மறுபடியும் இயக்க வேண்டும்
தெற்கு இரயில்வே இரயில் அமைச்சகத்திற்கு சிபாரிசு செய்துள்ள வாரம் 3 நாட்கள் எல்.டி.டி – நாகர்கோவில் வழி விழுப்புரம் ,தஞ்சாவூர், மதுரை ,நெல்லை இயக்க வேண்டும்
தெற்கு இரயில்வே மத்திய ரயில்வேக்கு ஒப்புதல் மற்றும் அனுமதி தந்த சிறப்பு ரயில் மும்பை – நெல்லை வழி பன்வெல், மட்காவ், மங்களூர், கொல்லம், புனலூர், தென்காசி, அம்பை இயக்க வேண்டும்
நெல்லை கோட்டதற்கான வரைபடங்கள் தயார் செய்யும் பணியை விரைவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதை கோரிக்கையை இதற்கு முன்னர் மும்பை விழித்தெழு இயக்க இருங்கிணைப்பாளர் சிறீதர் தமிழன்; சீயோன் கோலிவாடா சட்டமன்ற உறுப்பினர் தமிழ் செல்வன் மற்றும் கராத்தே முருகன் அவர்களுடன் இணைந்து கூடுதல் பொது மேலாளர் AGM, தலைமை பயணிகள் போக்குவரத்து மேலாளர் CPTM ; வணிக நிதி இயக்க மேலாளர் COM என பல அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.