மதுரை மாநகர காவல் சார்பாக ரிசர்வ் லையன் மாரியம்மன் கோவில் மண்டபத்தில்,சிறுவர் சிறுமியர் மன்றத்தில் உறுப்பினர்களாக உள்ள சிறுமியர் – சிறுவர்
களுக்கு தோல் மற்றும் பல் மருத்துவ பரிசோதனைக்கான இலவச மருத்துவ முகாமை மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தொடங்கி வைத்தார்,
காவல் உதவி ஆணையர் (உயர் நீதிமன்றம்) ராஜேந்திரன் மற்றும் காவல் உதவி ஆணையர் (தல்லாகுளம்) ராஜேஷ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதில் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் கலந்து கொண்டு ஆலோசனை மற்றும் அறிவுரை வழங்கினர். இம்முகாமில் 120 க்கும் மேற்பட்ட காவல்துறை சிறுவர் சிறுமியர் மன்ற சிறுமியர் – சிறுவர்கள் கலந்து கொண்டனர்.