புதுடெல்லியில் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் ஒரு நாள் தர்ணா போராட்டம் மதுரை மாவட்டக்கிளை பங்கேற்பு..

இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் நவம்பர் 29-ல் புதுடெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் ஒரு நாள் தர்ணா போராட்டம் நடைபெறுகிறது.

ஒரு நாள் தர்ணா போராட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்டக்கிளை பங்கேற்க உள்ளது.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மதுரை மாவட்டக்கிளையின் மாவட்டச்செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்துணைச் செயலாளர்.

வாசுதேவன் வரவேற்புரை ஆற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் முருகேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெயசித்ரா மற்றும் அருள்தாஸ் ஆகியோர் முன்னிலை வைத்தனர். மாவட்டத்துணை நிர்வாகிகள் சங்கர் மற்றும் பாண்டி உமாதேவி கல்வி மாவட்ட நிர்வாகிகள் சிவகுமார் மற்றும் தனபாக்கியம் செயற்குழு தீர்மானங்களை முன்மொழிந்தனர். மாவட்டச்செயலாளர் சீனிவாசன் முன்மொழி யப்பட்ட தீர்மானங்களை விளக்கிப் பேசினார்.

பொதுச்செயலாளர் மயில் சிறப்புரை யாற்றினார். மாவட்ட பொருளாளர் எமிமாள் ஞான செல்வி நன்றி கூறினார்.
எதிர்வரும் நவம்பர் 29-ல் புதுடில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் தேசிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல் புதிய கல்விக் கொள்கை 2020ஐ ரத்து செய்வது, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் ஒரு நாள் தர்ணா போராட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.
மாவட்ட மாறுதலில் திருப்பரங்குன்றம் ஒன்றியத்தில் பணி ஏற்றுள்ள பட்டதாரி ஆசிரியர் சுப்பிரமணியனுக்கு நான்கு மாத காலமாக ஊதியத்தை பெற்று வழங்காமல் வாழ்வாதாரத்தை பாதிக்கச் செய்த தொடக்கக் கல்வித் துறையை கண்டித்து முதல் கட்ட போராட்டமாக சுவரொட்டி இயக்கம் நடத்துவது என முடிவு செய்யப் பட்டது.
தொடக்கக்கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளமில்லாத விடுப்பிற்கு மட்டுமே விடுப்பு நாட்களுக்கு ஏற்றவாறு ஈட்டிய விடுப்பு நாட்களை குறைத்து கணக்கீடு செய்ய வேண்டும். சம்பளமில்லா விடுப்பு தவிர ஏனைய விடுப்புகளுக்கு குறைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு நாட்களை மீண்டும் கணக்கீடு செய்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் ஈட்டிய விடுப்பு கணக்கில் உரிய விதிகளின்படி வரவு வைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
இடைநிலை ஆசிரியர்களில் தேர்வு நிலை பெற்று தர ஊதியம் ரூ4,300-ல் உள்ள ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்புப் படி ரூ500ஐ தணிக்கை தடை என்ற பேரில் நிறுத்தம் செய்யாமல் உரிய விதிகளின்படி தொடர்ந்து அனுமதிக்க வேண்டும்.
வட்டாரக்கல்வி அலுவலங்களில் தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறை
களுக்கு புறம்பாக ஆசிரியர்களை வட்டாரக்கல்வி அலுவலகப் பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது. உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *