வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெரு மகா மாரியம்மன் ஆலயத்தில் இருந்து கடைவீதி ஸ்ரீ கோதண்டராமசாமி கோயில் வரை குண்டும் குழியுமான ஒரு வழி சாலையை சீரமைக்க வேண்டும் என “டைம்ஸ் ஆப் தமிழ்நாடு” செய்தி எதிரொலியாக உடனடியாக தற்காலிகமாக மூடப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் வரதராஜன்பேட்டை தெரு மகாமாரியம்மன் ஆலயத்தில் இருந்து நடுநராசம் ரோடு, வடக்கு அக்ரஹாரம் வழியாக கடைத்தெரு ஸ்ரீ கோதண்டராமசாமி கோயில் பேருந்து நிறுத்தம் வரை ஒரு வழிச்சாலையாக பயன்படுத்தப்படுகிறது.
இச்சாலை மகா மாரியம்மன் ஆலயத்தில் இருந்து வடக்கு அக்ரஹாரம் வரை உள்ள நடுநராசம் ரோடு தேர்வு நிலை பேரூராட்சி சாலையில் உள்ளது. வடக்கு அக்ரஹாரம் பகுதி நெடுஞ்சாலைத்துறை சாலையில் உள்ளது.
இச்சாலையில் கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி, பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, பேராவூரணி போன்ற ஊர்களுக்கு பேருந்துகளும், சரக்கு வாகனங்களும்,கார்கள், இரு சக்கர வாகனங்கள் செல்கின்றனர். இதைத்தவிர பள்ளிகள், மருத்துவமனை, தாசில்தார் அலுவலகம், நீதிமன்றம்,அஞ்சல் நிலையம் ஆகியவற்றிற்கு ஆகியவற்றிற்கு செல்லும் பொதுமக்கள், அலுவலர்கள், மாணவ, மாணவிகள் ஆகியோர் செல்லும் முக்கிய சாலையாகும்.
இச்சாலை மிகவும் சேதம் அடைந்துள்ளது, அதாவது குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. தற்போது மழைக்காலம் என்பதால் சாலையில் பல இடங்களில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதெல்லாம் நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள்,பேருந்து மற்றும் கனரக வாகனங்கள், கார்கள் இந்த சாலையில் சிக்கி அவதிப்படுகின்றனர் என்று நமது “டைம்ஸ் ஆப் தமிழ்நாடு” செய்தி வெளியானது. இந்த செய்தியின் எதிரொலியாக வலங்கைமான் தேர்வு நிலை பேரூராட்சி மன்ற சாலையான நடுநராசம் ரோடு சாலையில் உள்ள பள்ளங்களில் கல்,மண் போன்றவைகளைக் கொட்டி தற்காலிகமாக சரி செய்துள்ளனர். இது சம்பந்தமாக பேரூராட்சி சார்பில் தெரிவித்த போது இந்த சாலை விரைவில் புதுப்பிக்கப் படும் என தெரிவித்தார்கள். இதனையடுத்து பொதுமக்கள்,வாகன ஓட்டிகள் உடனடியாக செய்தியை வெளியிட்ட “டைம்ஸ் ஆப் தமிழ்நாடு” நாளிதழுக்கும், வலங்கைமான் தேர்வு நிலை பேரூராட்சி மன்றத்திற்கும் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.