C K RAJAN
Cuddalore District Reporter
948847123..
கடலூர் வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் துவக்கி வைத்தார்
கடலூர், டவுன்ஹால் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் எதிர்வரும் தேர்தலில் இளம் வாக்காளர்கள் முதல் அனைத்து வாக்காளர்களும் தங்கள் வாக்குரிமையை தவறாது 100 சதவீதம் மேற்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் மாணவர்கள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்
சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, வாக்காளர்iகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்
தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வழங்கினார்.
மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது,வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் குறித்தும், பட்டியலில் வாக்காளர் குறித்த விபரங்களில் உள்ள தவறுகளை திருத்தம் மேற்கொள்வதற்காகவும் 29.10.2024 முதல் 28.11.2024 வரை சிறப்பு சுருக்கதிருத்த முகாம்கள் நடைபெறுகிறது.
01.01.2025-ஐ தகுதியேற்பு நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியடைய உள்ள அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்த்துக் கொள்வதற்கு தகுதியுடையவர்கள் ஆவர். பட்டியலில் புதியதாக பெயர் சேர்த்தல் தவிர முன்னரே பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள் பெயரினை நீக்கம் செய்தல் குறித்தும், பட்டியலில் வாக்காளர் குறித்த விபரங்களில் உள்ள தவறுகளை திருத்தி சரிசெய்து கொள்வது குறித்தும் தொடர்புடைய பகுதிகளின் வாக்குச் சாவடி மையங்களில் உள்ள நிர்ணயிக்கப்பட்ட அலுவலரிடமோ (Designated Officer) அல்லது வாக்குச் சாவடி நிலை அலுவலரிடமோ (Booth Level Officer) அல்லது நகராட்சி ஆணையர்/வட்டாட்சியர்/வருவாய் கோட்டாட்சியர்/சார் ஆட்சியர் ஆகியோர்களது அலுவலகங்களிலோ பொதுமக்கள் தங்களது விண்ணப்பங்களை அளிக்கலாம். மேலும், https://voters.eci.gov.in/ என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம்.
சிறப்பு முகாம்கள் நிர்ணயிக்கப்பட்ட வாக்கச் சாவடி மையங்களில் 16.11.2024 (சனிக்கிழமை), 17-11-2024 (ஞாயிற்றுக்கிழமை), 23-11-2024 (சனிக்கிழமை) மற்றும் 24-11-2024 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடைபெற உள்ளது.
இச்சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் தங்களது வாக்காள் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் தொடர்பான சேவைகளை பெற்று பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ம.இராஜசேகரன், மாநகராட்சி ஆணையாளர் மரு.எஸ்.அனுமாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) வெங்கடேசன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஏ.கே.நாகராஜபூபதி, வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, மாவட்ட சமூக நல அலுவலர் சித்ரா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் செல்வி, தேர்தல் வட்டாட்சியர் சுரேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.