மதுரையில், மயான ஊழியரை குடிபோதையில் இருந்த போலீஸ்கார் தாக்கியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மதுரை, தெப்பக்குளம் அருகே உள்ள ஐராவதநல் லூர் பகுதியை சேர்ந்தவர் நல்லமணி (35). இவர் அந்த பகுதியில் உள்ள மயானத்தில் வேலை செய்து வரு கிறார்.

இந்நிலையில் கடந்த 10ம் தேதி இரவு தெப்பக்குளம் பகுதியில் நல்லமணி நின்று கொண்டிருந்தார். அப்போது, தெப்பக்குளம் போலீஸ் நிலையத் தில் பணிபுரிந்து வரும், போலீஸ்காரர் ஆனந்த் என்பவர் மதுபோதையில் அங்கு வந்துள்ளார். அவர் நல்லமணியுடன் தகராறு செய்ததுடன், அவரை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.

இதில் படுகாயமடைந்த நல்லமணி, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மயான ஊழியரை போலீஸ்காரர் தாக்கியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் அண்ணா பஸ் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள், போலீஸ்காரர் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சாலையில் நின்று கோஷங்கள் எழுப்பினர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது.போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் தலையிட்டு சமரசம செய்து குடிபோதை போலீஸ் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடரந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


இதற்கிடையே, இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவிட்டார். விசாரணை யில் தாக்குதல் சம்பவம் உண்மை என்பது தெரிய வந்தது. இதையடுத்து ஆணையர் லோகநாதன் போலீஸ்காரர் ஆனந்தை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *