மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளையைச் சேர்ந்த ரவீந்திரன், தமிழ்தாசன், கார்த்திகேயன், விஸ்வநாத் உள்ளிட்ட நால்வர் கொண்ட குழு, வைகையாறு தோன்றும் வருசநாடு மலைப்பகுதி, வாலிப்பாறை கிராமத்தில் உள்ள மூல வைகையில் இருந்து வைகையாறு கடலில் கலக்கும் கழிமுக பகுதியான ராமநாதபுரம் மாவட்டம் ஆற்றங்கரை பகுதி வரை பத்து நாட்கள் ஆய்வு செய்தனர். வைகையாற்றின் பல்லுயிரிகள், பண்பாட்டு சின்னங்கள், கழிவு நீர் கலக்குமிடங்கள் குறித்து மேற்கொண்ட ஆய்வை மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் ஒப்படைத்தனர்.
வைகையாற்றின் உயிர்ச்சூழல் மேம்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.