கால்நடை பராமரிப்புத்
துறையின் சார்பாக ஆடுகளுக்கான ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசி முகாம் மதுரையில் துவங்கியது.
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையில் நடைபெற்ற இந்த முகாமை கால்நடை பராமரிப்பு துறை மதுரை மண்டல இணை இயக்குநர் (பொறுப்பு) நந்தகோபால் துவக்கி வைத்தார்
இந்நிகழ்வில் மதுரை உதவி இயக்குநர் பழனிவேலு, நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் கிரிஜா, கால்நடை உதவி மருத்துவர்கள் வீரமணிகண்டன் (அச்சம்பத்து) வசந்த் (நடமாடும் கால்நடை மருந்தகம்) கோபி (நோய் புலனாய்வு பிரிவு) திவ்ய பாரதி (கொடிமங்கலம்) மற்றும் கால்நடை ஆய்வாளர் சக்திவேல், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் சிவக்குமார், முருகேசன் ஆகியோர் முகாமில் ஆடுகளுக்கான தடுப்பூசி பணிகளை மேற்கொண்டனர். இம்முகாமில் சுமார் 700க்கும் மேற்பட்ட ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் பகுதிகளில் நடக்கும் ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசி முகாம்களில் கலந்து கொண்டு தங்கள் ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்தி பாதுகாத்துக் கொள்ளுமாறு மண்டல இணை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.