கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
கும்பகோணம் அருகே திருப்பாலைத்துறை ஆப்தீன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் போதை விழிப்புணர்வு கருத்தரங்கம்…..

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருப்பாலைத்துறை ஆப்தீன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் மது,போதை விழிப்புணர்வு கருத்தரங்க கூட்டம் நடைபெற்றது….
இந்நிகழ்ச்சியில் பாபநாசம் காவல்துறை காவல் ஆய்வாளர் சகாய அன்பரசு மது,போதை பொருட்களை பற்றிய விழிப்புணர்வு மற்றும் உரக்கச் சொல் செயலி பற்றி மாணவ மாணவிகளுக்கு விளக்கி சிறப்புரையாற்றி மாநில அளவில் யோகா சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள்,கேடயம், சான்றிதழ் வழங்கினார்.
இதில் பேருராட்சித் தலைவர் பூங்குழலி கபிலன், பேரூராட்சி துணைத் தலைவர் பூபதி ராஜா மற்றும் ஆபிதீன் மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் ஓ.எஸ்.ஜே.காஜா முகைதீன், காவல்துறை உதவி ஆய்வாளர் ஜெகஜீவன், ஜமாத் தலைவர் முகமது பாரூக் , லயன்ஸ் அறக்கட்டளை ஷாப்ஜான் , பள்ளி நிர்வாகிகள் ஸ்ரீ கார்த்திகா, தலைமை ஆசிரியர் , ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.