வலங்கைமான் ஒன்றியத்தில் விளத்தூர் உள்ளிட்ட நான்கு ஊராட்சிகளில் தலா ரூபாய் 25 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையங்கள் திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளன.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்தில் ஆலங்குடி, இனாம் கிளியூர், அரித்துவார மங்கலம் மற்றும் ஆவூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இவற்றின் கீழ் பொதுப்பணி துறையில் மூலம் புறநோயாளி பிரிவு மற்றும் செவிலியர் தங்கும் விடுதியுடன் துணை சுகாதார நிலையம் ரூபாய் தலா ₹25 லட்சம் மதிப்பீட்டில் பொதுப்பணி துறையின் மூலம் 10 ஊராட்சிகளில் துணை சுகாதார நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்ற நிலையில் முன்னதாக ஐந்து துணை சுகாதார நிலையங்கள் பணிகள் முடிந்து திறந்து வைக்கப்பட்டுள்ளன.

அதையடுத்து ஹரித்து வார மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் துணை சுகாதார நிலையம் விளத்தூர் ஊராட்சியில் கட்டப்பட்டு பணிகள் முடிவு பெற்ற நிலையில் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது,

அதேபோன்று ஹரிதுவாரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் முனியூர் ஊராட்சியில் துணை சுகாதார நிலையம் கட்டுமான பணிகள் முடிவு பெற்று மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

ஆலங்குடி ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுப்பாட்டின் கீழ் வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இரண்டு துணை சுகாதார நிலையங்களும், கீழ விடையல், மேல விடையல் மற்றும் கண்டியூர் ஆகிய பகுதிகளில் ஆரம்ப துணை சுகாதார நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்றது.

இதில் கண்டியூர், கீழ விடையல் துணை சுகாதார நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்த நிலையில், வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் உள்ள இரண்டு துணை சுகாதார நிலையங்கள் கட்டுமான பணிகள் முடிவு பெற்று விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

மேல விடையல் ஊராட்சியில் துணை சுகாதார நிலையம் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேபோன்று ஆவூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் ஏரி வேலூர் பகுதிகளில் துணை சுகாதார நிலையங்கள் கட்டுமான பணிகள் முடிவு பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது மற்றும் வடகரை ஆலத்தூர் பகுதியில் துணை சுகாதார நிலையம் கட்டுமான பணிகள் முடிவு பெற்று விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

மேலும் இனாம் கிளியூர்
ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் உத்தமதானபுரம் பகுதியில் துணை சுகாதார நிலையம் கட்டுமான பணிகள் முடிவு பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதன் மூலம் வலங்கைமான் ஒன்றியத்தில் பொதுப்பணி துறையின் மூலம் தலா ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் 10 ஊராட்சிகளில் துணை சுகாதார நிலையம் 2.5 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வந்த நிலையில், முன்னதாக ஐந்து துணை சுகாதார நிலையங்கள் கட்டுமான பணிகள் முடிவு பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு வந்ததை அடுத்து, கட்டுமான பணிகள் முடிவுற்ற நான்கு துணை சுகாதார நிலையங்கள் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

மேல விடையல் ஊராட்சியில் மட்டும் துணை சுகாதார நிலையம் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *