கோவைக்கு வருகை புரிந்த தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவர் ஜோ.அருண் அவர்களை டாக்டர் அம்பேத்கர் இரவு நேர பாடசாலை நண்பர்கள் சந்தித்து சால்வை அணிவித்தனர்..
கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவர் ஜோ.அருண் வருகை புரிந்தார்..
அவரை தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரபி வரவேற்றார்..முன்னதாக தமிழ்நாடு விருந்தினர் மாளிகையில் கோவை மதுக்கரை வட்டம்,வெள்ளலூர் பேரூராட்சி ஆறாவது வார்டு,வள்ளலார் காலனி டாக்டர் அம்பேத்கர் இரவு நேர பாடசாலை நண்பர்கள் அவரை சந்தித்து, பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து வரவேற்றனர்..
இந்நிகழ்ச்சியில், அம்பேத்கர் இரவு நேர பாடசாலை ஒருங்கிணைப்பாளர் மற் றும் பொறுப்பாளர்கள்
லோ.சந்திரசேகரன்,கே.மகேந்திரன்,வே.ராஜேந்திரன்,ஆகியோர் உடனிருந்தனர்..