தாராபுரம் விடுதியில் தங்கி படிக்கும் தனியார் பள்ளி மாணவர்கள் 17-பேருக்கு பாலியல் தொல்லை, விடுதியின் கண்காணிப்பாளர் உட்பட இரண்டு பேர் கைது!

திருப்பூர் மாவட்டம்
தாராபுரத்தில் உள்ள சிந்து மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அப்பள்ளியின் விடுதி கண்காணிப்பாளர் சரண் வயது (25) , தொடர்ந்து பல மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.

ஒரு கட்டத்திற்கு மேல் பாலியல் தொல்லையை தாங்க முடியாத மாணவர் சம்பவம் பற்றி முதலில் பள்ளி தாளாளர் சுரேஷிடம் தெரிவித்துள்ளனர் அதனை பொருட்படுத்தாத பள்ளி தாளாளர் மாணவர்களை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து துணை காப்பாளர் ராம் பாபுவிடம் மாணவர்கள் முறையிட்டுள்ளனர். இருப்பினும் மாணவர்களை அடித்து துன்புறுத்தியுள்ளார் இதனை அடுத்து.

தனது பெற்றோர்களிடம் கூறி கதறி அழுதுள்ளனர் மாணவர்கள்.

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மற்றும் அவரது உறவினர்கள் நேற்று பள்ளியின் முன் திரண்டு பாலியல் தொல்லை கொடுத்த நபர்களை கைது செய்து பள்ளியை மூடி சீல் வைக்க வேண்டும் என பிரச்சனை எழுப்பினர்.

சம்பவம் அறிந்த தாராபுரம் போலீசார் தனியார் பள்ளிக்கு விரைந்து சென்று ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதை அடுத்து பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விடுதிக்காப்பாளர் சரண் கைது செய்யப்பட்டார்

இதனை அடுத்து திருப்பூரில் இருந்து வந்த குழந்தைகள் நல அமைப்பு மற்றும் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதில் பாதிக்கப்பட்ட 17 மாணவர்கள் பள்ளி தாளாளர் சுரேஷ் மற்றும் காப்பாளர் சரண் உதவிக்காப்பாளர் ராம்பாபு மாணவர்களுக்கு உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் தொல்லை கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது

இதனை எடுத்து 17 மாணவர்கள் புகார் தெரிவித்தனர் புகாரின் பேரில் தாராபுரம் போலீசார் பள்ளி தாளாளர் சுரேஷ் விடுதி காப்பாளர் சரண் உதவிக்காப்பாளர் ராம்பாபு ஆகிய மூன்று பேர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்.
இந்த சம்பவம் தாராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *