திண்டிவனத்தில் 21-வது மாநில சப்-ஜூனியர் வூசு போட்டிகள் 3 நாட்கள் நடைபெற்றன. இப்போட்டியில் விழுப்புரம் சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, திருப்பத்தூர் உட்பட 27 மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து பயிற்சியாளர் ஜாக்கிசங்கர் தலைமையில் 25 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு 12 தங்கம் 16 வெள்ளி மற்றும் 9 வெண்கல பதக்கங்களை வென்று, தமிழகத்தின் 2வது ஓவரால் சாம்பியன்ஷிப் பெற்றனர்.

இப்போட்டியில் தலா 2 தங்கப்பதக்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கம் பெற்ற ரேஷ்மி, ஸ்ரீலதா, கங்கா வர்ஷினி, ராகவி மற்றும் தீரா ஆகியோர், டிசம்பர் 1 முதல் 6 வரை பஞ்சாப் மாநிலம், படியாலாவில் நடைபெறும் 24-வது சப்-ஜூனியர் தேசிய வூசு சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தேர்வாகியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *