எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி – சென்னை தினசரி புதிய அரசு பேருந்து சேவை சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் சுற்று வட்டார பல்வேறு கிராமங்களில் இருந்து நாள்தோறும் தொழில் நிமித்தமாகவும், மருத்துவம் மற்றும் கல்வி தொடர்பாக ஏராளமான பொதுமக்கள் மாணவ மாணவிகள் சென்னைக்கு சென்று வருகின்றனர் அவ்வாறு சென்னை செல்லும் பொதுமக்களின் நலன் கருதி கூடுதலாக பேருந்து இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது அதன்படி சீர்காழியில் இருந்து சென்னைக்கு நாள்தோறும் இரவு நேரங்களில் அரசு பேருந்து சேவை இயக்கம் தொடங்கப்பட்டது. புதியபேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் பங்கேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மோட்டார் வாகன ஆய்வாளர் விஸ்வநாதன், பேரக்குவரத்து துறை அதிகாரிகள் சீர்காழி நகராட்சி ஆணையர் மஞ்சுளா உள்ளிட்டோர் பங்கேற்றனர்