தேனி நாடார் சரஸ்வதி மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட தலைநகரான தேனியில் மக்களின் நன்மதிப்பை பெற்ற சிறந்ததொரு கல்வி நிறுவனமான சிறந்தொரு கல்வி நிறுவனங்களின் ஒரு அங்கமான தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் சென்சுருள் சங்கம் சயின்ஸ் அண்டு ஹீமானிட்டீஸ் துறை மற்றும் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆகியவைகள் இணைந்து நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது
இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் செயலாளர் ஏ. ராஜ்குமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக தேனி மேலப் பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவரும் நாடார் சரஸ்வதி கல்வி குழும நிறுவனங்களின் தலைவருமான கல்வி த்தந்தை டி ராஜமோகன் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
கல்லூரியின் செயலாளர் ஏ. எஸ். ஆர் .மகேஸ்வரன் கல்லூரியின் இணைச் செயலாளர் எஸ் நவீன் ராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் செஞ்சிலுவை சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் எம் மகாலட்சுமி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
கல்லூரியின் முதல்வர் டாக்டர் சி. மதளை சுந்தரம் போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்தும் போதைப் பொருளால் பல்வேறு குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துள்ளன எனவே போதை பொருள் என்ற அரக்கனை விரட்ட வேண்டும் கல்லூரி மாணவ மாணவிகள் போதைப் பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு புரியுமாறு விளக்க வேண்டும் என்று வாழ்த்துரையில் எடுத்துரைத்து விளக்கி பேசினார்
இந்த அருமையான போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தேனி மாவட்ட சுங்கத் துறையின் உதவி ஆணையர் எஸ் ரவிச்சந்திரன் கலந்துகொண்டு போதை பொருட்களை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் போதை பொருட்களான கூலி கூலிப் கொட்கையின் கஞ்சா சாரஸ் கணேஷ் புகையிலை பான் பராக் போன்ற போதைப் பொருட்களை கண்டறிதல் அதனை சட்ட விரோதமாக கடத்தி விற்பவர்கள் மற்றும் சட்ட விரோதமான போதைப் பொருட்களை உபயோகிப்பவர்களுக்கான தண்டனைகள் மேலும் 18 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை போதைப் பொருள் கடத்ததலுக்கு எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை பற்றியும் மேலும் போதைப் பொருள் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொது மக்களிடையே எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சிறப்புரையாற்றினார் .
போதைப் பொருள் தடுப்பு முதலாம் ஆண்டு துறைத் தலைவர் சி.பிரதாப் உறுதி மொழியை வாசிக்க அதை மாணவர்கள் பின்பற்றி உறுதி மொழியை ஏற்றார்கள் தேனி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் பாண்டியராஜன் பங்கேற்று புகையிலை ஒரு முறையே பயன்படுத்தும் பாலிதீன் பைகள் விஞ்ஞான உலகத்தின் துரித உணவுகள் ஆகியவற்றினால் மனித உடலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் தீமைகள் குறித்து விளக்கி பேசி மாணவ மாணவிகள் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என சிறப்புரையாற்றினார் .
தேனி சமூக நலத்துறை சேவை மையத்தின் அலுவலர் கே.தீபா தேனி ஆரா மது போதை மறுவாழ்வு மையத்தின்
இணை நிறுவனர் என் அமானுல்லா ஆலோசகர் எஸ் பிரவீன் குமார் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்று மது போதையால் மனித உடலில் ஏற்படும் பாதிப்பு பொருளாதார ரீதியாக பாதிக்கும் விஷயங்கள் போதைப் பொருட்களிலிருந்து தற்காத்துக் கொள்வது போதைப்பொருள் உபயோகிப்பதால் சமுதாயத்தில் நமது அந்தஸ்தை இழப்பது போதைப் பொருளால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் கொடுத்து மாணவ மாணவிகளுக்கு விளக்கி பேசினார்கள்
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியில் துணை முதல்வர்கள் என் மாதவன் டாக்டர் எம் சத்யா மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் டாக்டர் சி கார்த்திகேயன் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் கே பாரதி கண்ணன் என் கேசவமூர்த்தி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் வெகு சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகை புரிந்த அனைவரையும் வரவேற்று கனிவுடன் உபசரித்தனர்.சயின்ஸ் அண்டு ஹீமானிட்டீஸ் துறையின் பேராசிரியர் வினிதா நன்றி கூறினார்