கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
கும்பகோணம் அருகே அய்யம்பேட்டை மதகடிபஜார் ஸ்ரீ சொக்க பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேகம்.. .
திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்..
தஞ்சாவூர் மாவட்டம்,கும்பகோணம் அருகே அய்யம்பேட்டை மதகடிபஜாரில் அமைந்துள்ள ஸ்ரீ சொக்க பிள்ளையார் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணி நடைபெற்று, முடிவுற்ற நிலையில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் நடைபெற்றன.
அதனை தொடர்ந்து கணபதி ஹோமம், மகாலெட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்பட பூர்வாங்க பூஜைகள் உள்பட யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து மேள, தாளங்களுடன் வேத மந்திரங்கள் முழங்க அருள்மிகு ஸ்ரீ சொக்க பிள்ளையார் மற்றும் பரிவார தெய்வங்களின், சுவாமி ஆலயத்தின் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் ,மதகடிபஜார் கிராமவாசிகள் செய்து இருந்தனர்.