மேட்டுப்பாளையம் தாலுக்கா காரமடை ஊராட்சி ஒன்றியம் ஓடந்துறை காந்திநகர் தொடக்கப் பள்ளியில்
“குழந்தைகள் தின விழா” கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சியில்
பள்ளித்தலைமை ஆசிரியர் திருமதி. புனித செல்வி வரவேற்புறையாற்றினார்.
மாணவர்கள் “எங்கள் எதிர் கால இலட்சியம் வெறும் கனவு அல்ல நனவுதான்” என்று தாங்கள் செய்யப்போகும் பணி குறித்து நினைவு படுத்தும் வகையில் உடை அணிந்து வந்து விருப்பத்தொழிலையும், எனது விருப்பம் என்ற தலைப்பில் தங்கள் விருப்பத்தையும் வெளிப்படுத்தினர்.
“மகிழ் முற்றம்” மாணவர்குழு தலைவர்களுக்கு சிறப்பு விருந்தினர் திரு. ஜெயராமன் அவர்கள் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பள்ளி மாணவர்கள் நன்னடத்தையுடன்எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் எழுதிய ஆலோசனை கடிதத்தை ஆசிரியர் உமா வாசித்துக் காட்டினார் .
மாணவர்களுக்கு ரோஜா மலர்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. விழாவில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் திருமதி.சர்மிளா பானு மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.
ஆசிரியை திருமதி. அமல சிந்தியா அவர்கள் நன்றியுரை கூறினார்.