வலங்கைமானில் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் சார்பாக இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்கலால் நேரு அவர்களின் 136- வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சார்பதிவாளர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் சார்பாக இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்கலால் நேரு அவர்களின் 136- வது பிறந்த நாளை முன்னிட்டு, அன்னாரின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் திருவாரூர் மாவட்ட தலைவர் வலங்கைமான் குலாம் மைதீன், வலங்கைமான் நகர காங்கிரஸ் முன்னாள் தலைவர் கலியமூர்த்தி ஆகியோர் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை வரலாற்றை விரிவாக பேசினார்கள். அதனைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், வாய்ப்பாடு, எழுது பொருட்கள் மற்றும் மாணவ-மாணவிகள், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள்.நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ- மாணவிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.