பென்னாகரம் ஒன்றியம் சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்கு தலைமை ஆசிரியர் மா. பழனி தலைமை
தாங்கினார்.குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் ஜவஹர்லால் நேரு அவர்களின் நினைவை போற்றும் விதமாக நேருவைப் பற்றிய கவிதை, கட்டுரை மற்றும் ஓவியம் வரைதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது.
குழந்தைகள் தின உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.
குழந்தைகள் தினத்தில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் பேசும்போது குழந்தைகள் நாட்டின் வருங்கால தூண்கள் எனவும் கல்வி, ஒழுக்கம் உள்ளிட்டவைகளில் மாணவர்கள் சிறந்த விளங்கவேண்டும்.
குழந்தைகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்காக கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி பன்முகத் தன்மையுடன் மிளிர வேண்டும் என குழந்தைகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.