தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தாலுகா தமிழகம் கேரளாவை இணைக்கும் தமிழக எல்லை முக்கிய கிராமாமன போடி மெட்டு மலை கிராமத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா மேல் சொக்கநாத புரம் பேருராட்சி மன்ற தலைவர் கண்ணன் காளி ராமசாமி செயல் அலுவலர் க. சிவக்குமார் ஆகியோர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்.
இந்த முகாமில் இளநிலை உதவியாளர் வாசிமலை பேரூராட்சி அலுவலக உதவியாளர் சேகர் ஆகியோர் மக்கள் கள் தொடர்பு முகாமில் மலை கிராம மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வெகு சிறப்பாக செய்தார்கள்.
இந்த முகாமில் போடி மெட்டு மலை கிராம மக்கள் இதனை சுற்றியுள்ள மலை கிராம மக்கள் ஏராளமானோர் முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் இரா நல்லதம்பி வெகு சிறப்பாக செய்திருந்தார்