தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா தென்கரை கள்ளிப்பட்டியில் அருளகம் மாலை நேர படிப்பகம் சார்பாக தேசிய குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சிக்கு அருளகம் மாலை நேர படிப்பகம் நிறுவனர் பேராசிரியர் முனைவர் ஜோஸ்வா டேவிட் அவர்களின் தலைமையில் ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது
நிகழ்ச்சியில் பெரியகுளம் தாமரைக் குளம் கள்ளிப்பட்டி ஆகிய பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு பேச்சு போட்டி நடன போட்டி மாறுவேட போட்டி மற்றும் நாடகம் நிகழ்ச்சிகள் நடைபெற்றது
நிகழ்ச்சியில் தென்கரைப் பேரூராட்சி தலைவர் வே.நாகராஜ் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த மாவட்ட அமைப்பாளர் இரா.சேகுவேரா டாஸ்மாக் தொழிலாளர் விடுதலை முன்னணி மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் திருமாபாண்டி பேரூர் செயலாளர் இரட்டைமலை ரமேஷ் மாவட்டத் துணை அமைப்பாளர் ராவண வரதன் ஒன்றிய துணைச் செயலாளர் இனியன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கவுன்சிலர் கைலாசம் திராவிடர் கழகம் ஒன்றிய செயலாளர் ஆதித்தமிழன் பேராசிரியர் அழகன் திமுக கவுன்சிலர்கள் தேவராஜ் தென்னரசு கோடை பண்பலை தொகுப்பாளர் ரங்கநாதன் ஆகியோர் கலந்து கொண்டு குழந்தைச் செல்வங்களை வாழ்தி வாழ்த்துரையாற்றினர்.