மதுரையில் நூறாண்டு பாரம்பரியமிக்க தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் மதுரை மாநகராட்சி ஒத்துழைப்புடன் ரூ.ஒரு கோடியே 2 லட்சம் பங்களிப்புடன் தமிழக அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ49 லட்சம் ஆக ஒரு கோடியே 51 லட்சம் மதிப்பீட்டில் மதுரை மாநகராட்சி மண்டலம் 1 வார்டு 10 ல் மதுரை மாட்டுத்தாவணி எதிர்புறம் பிரஸ் காலனியில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படவிருக்கும் அதிநவீன மின் எரிவாயு எரியூட்டு மயானம் செயல்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டது.
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் அதிநவீன மின் எரிவாயு எரியூட்டு மயானத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் வர்த்தகசங்க செயலாளர் ஸ்ரீதர் துணைத் தலைவர்கள் செல்வம் , தனுஷ்கோடி,இணை செயலாளர் கணேசன் , செந்தில்குமார் , முன்னாள் தலைவர் நீதி மோகன், வர்த்தக சங்கத்தின் பெண் தொழில் முனைவோர் அமைப்பின் தலைவர் ராஜகுமாரி ஜீவகன், மற்றும் சங்க செயற்குழு உறுப்பினர்கள் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.