திருவாரூர் மாவட்டம் திருவாரூர் வட்டம் எண்கண் அருகே அருள்மிகு ஸ்ரீ பிரஹன் நாயகி அம்பிகை சமேத ஶ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் சனிமஹா பிரதோஷம் நடைபெற்றது.

சனி மஹா பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி அம்பாள் நந்தியம்பெருமான் ஆகிய தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை நடைபெற்றது.

இவ்வாலயத்திற்கு பக்த கோடி பெருமக்கள் அனைவரும் வருகை தந்து ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரரை வழிபட்டால் சகலவிதமான தோஷங்களும் நிவர்த்தி ஆகும் மேலும் இழந்த செல்வங்களும் பதவிகளும் கிடைக்கின்ற தலமாக விளங்குகிறது என்பதை அருணகிரிநாதர் பாடிய திருப்புகலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாலயம் அர்ஜுனன் இராஜராஜசோழன் போன்ற பல மன்னர்களும் தல புராணங்களுடன் இணைந்த தளமாகவும், 6,850 வருஷம் பழமையான ஆலயமாக இவ்ஆலயம் விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாலயத்தில் மாத பிரதோஷம், பௌர்ணமி தினங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது

இருந்தாலும் இவ்வாலயம் கும்பாபிஷேகம் நடைபெற்று பல நூறு வருடங்களாக இருப்பதால் ஆலயம் புதுப்பித்து விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது பக்தர்களின் வேண்டுதலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாலயத்தை பற்றியும் தல வரலாறு குறித்தும் கௌதம் சிவாச்சாரியார் பேட்டியளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *