இந்திய குடியரசு கட்சி முன்னாள் கடலூர்( கி)மாவட்ட தலைவர் பால வீரவேல் கோரிக்கை.
மழைக்காலங்களில் அரசு நிதி ஒதுக்கீடு செய்தால் அதனை கண்காணிக்க குழு அமைக்க வேண்டுமென
இந்திய குடியரசு கட்சி முன்னாள் கடலூர்( கி)மாவட்ட தலைவர் பால வீரவேல் கோரிக்கை. வடகிழக்கு பருவ மழை பெய்து கொண்டிருப்பதால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுகிறது,
ஆங்காங்கு உள்ள குளம் குட்டை ஏறி நிரம்பி வழிகின்றன சரியான பாதை இல்லாத காரணத்தினால் முட்புதர்கள் மண்டி கிடப்பதாலும், தனியார் நில உரிமையாளர்கள் ஏரி ,குளம் ,குட்டைகளை ஆக்கிரமிப்பு செய்ததால் மழைநீர் நிரம்பி வழிந்து ஓட வழியில்லாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கின்றன இதனால் காற்றின் ஈரப்பதன்மையால் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்க்கிருமிகள் பரவும் அபாயம் உள்ளது,
பொதுமக்களுக்கு எவ்வித தொற்று நோய்களும் பரவாமல் இருக்க அனைத்து கிராமத்திற்கும் டாக்டர்கள் முதற் கொண்டு செவிலியர்கள் வரை வீடுவீடாக நேரில் சென்று பரிசோதித்து அவரவர்களுக்கு தகுந்தார் போல் மருந்து மாத்திரை கொடுக்க வேண்டும்,
அரசாங்கம் கடந்த ஆண்டு மழைக் காலங்களில் ஊராட்சித் தலைவர்கள் மூலமாக மக்கள் தொகை அடிப்படையில் 40,000 ஆயிரம் ரூபாயிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்து பொதுமக்களுக்கு இரவு பகல் நேரங்களில் உணவு வழங்கியது என்பது நாம் அறிவோம்,
மேலும் ஆக்கிரம்புகளை அகற்ற ஜே,சி,பி இயந்திரங்களைக் கொண்டுசரிசெய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது, அந்தநிதிக்கு அரசாங்கம் கணக்குவழக்கில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டது, அதுபோன்ற நிலைமை உருவானால் அரசாங்கத்திலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை சரிவர செலவு செய்ய மாட்டார்கள் ஏன்என்றால்
ஊராட்சி மன்ற தலைவர்களின் பதவி காலம் இன்னும் 50 நாட்கள் தான் உள்ளது.
இந்த தருவாயில் ஒதுக்கீடு செய்யும் நிதியை சுருட்டிக்கொண்டு சென்று விடுவார்கள்,
அது மட்டுமல்லாமல் மீண்டும் தேர்தலில் போட்டியிடும் ஊராட்சி மன்ற தலைவர்கள் தேர்தலை மனதில் கொண்டு தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே செலவு செய்யும் சூழ்நிலைஏற்படும் அதற்கு பணியில்உள்ள ஊராட்சி செயலாளர்களும் உடந்தையாக இருப்பார்கள், இதனால் பொதுமக்களுக்கிடையே மோதல் போக்கு உருவாக்கும் என்பதை மாவட்ட நிர்வாகம் கவனித்தல் கொண்டு அரசாங்கம் மழைக்காலங்களில் உணவு மற்றும் அடிப்படை தேவைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்தால் அதனை நடைமுறைபடுத்த ஊராட்சி மன்ற தலைவரை நீக்கிவிட்டு
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பணி செய்கின்ற ஊராட்சி செயலாளரை இடமாற்றம் செய்துவிட்டு வட்டார வளர்ச்சி மற்றும் பேரூராட்சி, நகராட்சி அலுவலர்களின் நேரடி கண்காணிப்பில் மாவட்ட ஆட்சியர்முதல் மாவட்ட ஊரக &பேருராட்சி&நகராட்சி அலுவலர்கள் தலைமையில் ஒரு கண்காணிப்பு குழு அமைத்து ஒதுக்கீடு செய்யும் நிதியை பொதுமக்களுக்கு செலவு செய்ய வேண்டும் என இந்திய குடியரசு கட்சி சார்பாக வேண்டுகோள் விடுகின்றோம்.
இவ்வாறு இந்திய குடியரசு கட்சிமுன்னாள் கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் பாலவீரவேல் வேண்டுகோள் விடுத்துள்ளார் .