C K RAJAN
Cuddalore District Reporter
9488471235..
ஊழலுக்கு எதிரான அமைப்புகள் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும்!
கடலூர் மாவட்டம் என்எல்சி யில் என்எல்சிஐஎல் கண்காணிப்பு விழிப்புணர்வு இயக்க நிறைவு விழாவில், தலைவர் பிரசன்ன குமார் மோட்டுபள்ளி பேச்சு…
ஊழல் ஒழிப்பு குறித்த, கண்காணிப்பு விழிப்புணர்வு இயக்க விழாவானது. மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சார்பில், “நேர்மை கலாச்சாரமே. தேசத்திற்கான வளர்ச்சி” என்ற மையக் கருத்தில், கடந்த 28.10.2024 முதல் 03.11.2024 வரை. சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிகளுக்கான நிறைவு விழா, நெய்வேலி வட்டம்-20, கற்றல் மற்றும் மேம்பாட்டு மையத்தில் உள்ள யக்னேஸ்வரன் கலை அரங்கத்தில் நடைபெற்றது.
என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் எம் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் நிறுவனத்தின் மனித வளத்துறை இயக்குநர் சமீர் ஸ்வரூப். நிதித்துறை இயக்குநர் டாக்டர் பிரசன்னகுமார் ஆச்சார்யா, நிறுவன கண்காணிப்புத் துறை தலைமை அதிகாரி அப்பாகண்ணு கோவிந்தராஜன், மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை டிஐஜி
G. சிவகுமார் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கண்காணிப்புத் துறை தலைமைப் பொது மேலாளர் இரணியன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
துளிப்படப்போட்டி
முன்னதாக, நிகழ்ச்சியின் துவக்கத்தில் கண்காணிப்பு விழிப்புணர்வு இயக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளை உள்ளடக்கிய ஒரு சிறிய காணொளி திரையிடப்பட்டது.
தொடர்ந்து, கண்காணிப்பு விழிப்புணர்வு இயக்க விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட, துளிப்படப்போட்டி, பதாகைப் போட்டி மற்றும் ரங்கோலி (ஸ்டாம்ப் வடிவ) கோலப்போட்டி போன்ற பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், என்எல்சிஐஎல் ஊழியர்களுக்கு சிறந்த “விழிப்புணர்வு ஊழியர்” என்ற விருதுகளும் வழங்கப்பட்டன. ஆலோசனைகளை ஒருங்கிணக்க வேண்டும்
நிறுவனத்தின் 68 ஆண்டுகால நற்பெயருக்கு களங்கம் ஏற்படாமல் இருக்க. ஊழலுக்கு எதிரான அமைப்புகளை முழுமையாகப் பாதுகாக்க வேண்டும் என்று அவர் என்எல்சிஐஎல் குழுவினரை கேட்டுக்கொண்டார்.
கடந்த 3 மாத கால பிரச்சாரத்தில் பெறப்பட்ட அனைத்து அர்த்தமுள்ள ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும், என்எல்சிஐஎல் நிறுவனத்தின் அனைத்து ஊழியர்கள் மற்றும் பங்குதாரர்களின் நலனுக்காக ஒருங்கிணைக்குமாறு கண்காணிப்புத் துறையை அவர் கேட்டுக்கொண்டார்.
கிராம சபை மூலம் விழிப்புணர்வு
இந்த கண்காணிப்பு விழிப்புணர்வு இயக்க விழாவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல்வேறு நிகழ்ச்சிகளான தெரு நாடகங்கள், ஃப்ளாஷ் மாப் நடனம், வினாடி-வினா போட்டிகள் மற்றும் கருத்துரையாடல்கள் ஆகியவற்றின் மூலம் கண்காணிப்பு விழிப்புணர்வு விழா, ஒரு சடங்காக அமையாமல் மிகச்சிறந்த செயல்பாடுகளுக்கான ஒரு தளமாக அமைந்திருந்தது.
குறிப்பாக, ‘கிராம சபை கூட்டங்கள் என்ற புதிய அணுகுமுறையின் மூலம் ஊழல் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு அனைவரிடத்திலும் நேர்மையின் முக்கியத்துவத்தை எளிதாக எடுத்துரைக்கும் விதமாக இருந்தது.
பங்கேற்றோர்
இந்த நிறைவு விழா நிகழ்ச்சியில், நிறுவனத்தின் செயல் இயக்குனர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள், பொறியாளர்கள், பட்டய பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் நலச் சங்கங்களின் பிரதிநிதிகள், அனைத்து நலச்சங்கங்களின் நிர்வாகிகள், பொதுத் துறையில் பணிபுரியும் மகளிர் மன்ற நிர்வாகிகள், தொழிலாளர்- ஊழியர்கள், சொசைட்டி, ஒப்பந்தத் தொழிலாளர்கள், பள்ளி மாணக்கர்கள். ஆசிரியர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியின் நிறைவாக, கண்காணிப்புத் துறை பொது மேலாளர் சித்ரகலா நன்றி கூறினார்.