திருவாரூரில் கிழக்குக் கடற்கரை ரயில் பயணிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.. கிழக்கு கடற்கரை ரயில் பயணிகளின் கூட்டமைப்பு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
திருவாரூர் நாகை புறவழிச் சாலையில் ரோட்டரி கிளப் ஆப் கூட்ட அரங்கில் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்திற்கு திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்பவர்கள் சங்கத் தலைவர் வழக்கறிஞர் ஆர் நாகராஜன் தலைமை வகித்தார்
திருவாரூர் முன்னாள் நகர மன்ற தலைவரும் டிரஸ்ட் ரோட்டரி கிளப் தலைவர் வழக்கறிஞர் ரவிச்சந்திரன் மாவட்ட தென்னக ரயில்வே உறுப்பினர் பி பாஸ்கரன் வரதகர் சங்க தலைவர் லயன் சி. பாலமுருகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர் லயன் சி குமரேசன் வரவேற்று பேசினார்.
ஆலோசனைக் கூட்டத்தில் கிழக்கு கடற்கரை ரயில் கூட்ட அமைப்பின் புதிய நிர்வாகிகள் தலைவர் செயலாளர் பொருளாளர் உள்ளிட்டோரை சக உறுப்பினர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்
அமைப்பின் தலைவராக காரைக்குடி எஸ் ஆர் எம் பாலசுப்பிரமணியன் செயலாளராக திருவாரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர் நாகராஜன் பொருளாளராக தேவகோட்டையைச் சார்ந்த மகிழபாட்ஷா ஒருங்கிணைப்பாளராக காரைக்குடி தேர்வு செய்யப்பட்டனர்.
மற்ற நிர்வாகிகள் அவரவர் பொறுப்புகளில் தொடர்ந்து பணியில் ஈடுபடுவார்கள் பாம்பன் பாலம் திறப்பு விழாவிற்கு வருகை தரும் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ அவர்களையும் வரவேற்று சங்க அமைப்பின் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
நிகழ்வின்போது ஏ கே எம் குழுமத்தின் நிர்வாக இயக்குனரும் திருவாரூர் வளர்ச்சி குழுமத்தின் செயலாளருமான மருத்துவர் செந்தில் உள்பட ரயிலு பயணிகளின் நல சங்கங்கள் வர்த்தக சங்கங்கள் பொதுநல சங்கங்களின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
இறுதியாக காரைக்குடியைச் சேர்ந்த கே சி ஆர் பி டபிள்யூ ஏ அமைப்பின் இணை செயலாளர் ஆர் பரமேஸ்வரன் நன்றி கூறினார்.