தேனி நாடாளுமன்ற உறுப்பினர்
தங்க தமிழ்செல்வன் தலைமையில்
பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் பெரியகுளம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கே எஸ் சரவணகுமார் எம் எல் ஏ தேனி நகராட்சி நகர் மன்ற தலைவர் ரேணு பிரியா பாலமுருகன் ஆகியோர் முன்னிலையில் 15வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூபாய் 55 லட்சம் மதிப்பீட்டில் தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு சொந்தமான புதிதாக அமைக்கப்பட்ட எல்.பி.ஜி. தகன எரிவாயு நிலையத்தை தங்க தமிழ்ச்செல்வன் எம்பி பொத்தானை அமுக்கி பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் நகராட்சி ஆணையாளர் ஏக ராஜ் நகர் மன்ற துணைத் தலைவர் வழக்கறிஞர் செல்வம் தேனி நகர செயலாளர் நாராயண பாண்டியன் நகராட்சி நகர் மன்ற உறுப்பினர்கள் நகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் நகர திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்