திருவாரூர்,
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி,
அருகேயுள்ள கூத்தாநல்லூர் மனோலயம் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளியில் எம்.என்.நம்பியார் சாமியின் சிஷ்யர் தட்சிணாமூர்த்தி மற்றும் முருகையன் ஆகியோரின் ஏற்பாட்டின் படி, நினைவு தின விழா அனுசரிக்கப்பட்டது.
நினைவு தின விழாவில்,எம்.என். நம்பியார் சாமியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது தொடர்ந்து அவரின் திரைப்படத் துறையின் நடிப்புகள் குறித்தும் ஐயப்ப பக்தர் குறித்தும் பேசினர்.
நிகழ்வில், திருவாரூர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எல்.எம். முகமது அஷ்ரப், லயன் சங்க மாவட்ட தலைவர் என்.கே.ராஜ்குமார், தமிழக கட்டிடத் தொழிலாளர்கள் மத்திய சங்க மாநிலத் துணைத் தலைவர் சேகர், நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்க தலைவர் கருணாநிதி, வர்த்தக சங்க நிர்வாகி கண்ணன்,
திருவாரூர் மாவட்ட மக்கள் தொடர்பு மருந்து வணிகர்கள் அணித் தலைவர் எம்.அண்ணாமலை, சமூக ஆர்வலர் தமிழழகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.