கும்பகோணம் செய்தியாளர்
ஆர். தீனதயாளன்
கும்பகோணம் அருகே பாபநாசத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம்…

பாபநாசம் எம் .எல். ஏ .ஜவாஹிருல்லா கலந்து கொண்டு அடையாள அட்டையை வழங்கினார். …
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பாபநாசம் ஆபிதீன் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா சிறப்பு முகாமினை தொடங்கி வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டையை வழங்கினார்.
இம்முகாமில் எலும்பு முறிவு மருத்துவர் கண் மருத்துவர் ,காது, மூக்கு, தொண்டை, மனநல மருத்துவர் ஆகியோர் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசோதனை செய்து அடையாள அட்டை வழங்க பரிந்துரை செய்தனர்.
இதில் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன், பேரூராட்சி கவுன்சிலர் புஷ்பா சக்திவேல் ,மாவட்ட திட்ட அலுவலர் ஜான் ஹென்றி, மருத்துவர்கள் அப்துல்கவி, பிரபா, கவிதா,துளசிபிருந்தா, மமக தஞ்சை வடக்கு மாவட்ட பொறுப்புக் குழு தலைவர் ரஹ்மத் அலி, பொறுப்புக் குழு உறுப்பினர்கள் அஷ்ரப் அலி, புர்க்கான் அலி, பாபநாசம் பேரூர் செயலாளர் ஜாஹிர் உசேன், பொருளாளர் அபுல் ஹஸன், பள்ளி தலைமை ஆசிரியர் செல்வி மாவட்ட அரிமா சங்கத் தலைவர் சாப்ஜான் வேலு நாச்சியார் லயன் சங்கத் தலைவி தில்லைநாயகி சம்பந்தம் சாரதா மகளிர் மன்ற பொறுப்பாளர் கல்பனா உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் பலர்
கலந்து கொண்டனர் .