கம்பம் நகராட்சி பகுதியில் தமிழ்நாடு நகர்புற சாலை உள்கட்டமைப்பு திட்டம் 2024-25 கீழ் நடைபெற்ற, நடைபெற்று வரும் தார் சாலை , பேவர்பிளாக் சாலை பணிகள் மற்றும் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் கே என் எம் டி 2024-25) ஆம் ஆண்டின் கீழ் ரூ.265.00 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று
வரும் ஆம்னி பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை கம்பம் நகர் மன்ற தலைவர் திருமதி வனிதா நெப்போலியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டார்
இந்த ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் எஸ் பார்கவி பொறியாளர் அய்யனார் உதவி பொறியாளர் சந்தோஷ் குமார் நகர் மன்ற உறுப்பினர்கள் விருமாண்டி குரு குமரன் சம்பத் குமார் மாதவன் மற்றும் அனைத்து நகர் மன்ற உறுப்பினர்கள் நகராட்சி ஒப்பந்ததாரர்கள் அப்துல் சமது சகாப்தீன் மற்றும் பலர் உடனிருந்தனர்