சாம்பவர்வடகரை குளத்தில் சிதலமடைந்த மதகுகள் கரையில் ஏற்பட்டுள்ள விரிசல் சரி செய்ய விவசாயிகள் கோரிக்கை
தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரியகுளத்தில் 1,திருவிதாங்கூர் மதகு 2, கூனி கரைமதகு 3,பெரியமதகு 4,புதுமதகு 5,கன்னியாமதகு 6,செம்பத்துமதகு 7,கள்ளமதகு என எழுமதகுகள் உள்ள நிலையில் இதில் ஒரு சில மதகுகள் முழுமையாக சிதலமடைந்து தண்ணீர் செல்ல முடியாத நிலையிலும் ஒரு சில மதகுகள் சிதலமடைந்த தண்ணீர் வீனாக வெளியே செல்கிறது.
இதனால் விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு உள்ளாகி வருவதாகவும் இது குறித்து அதிகாரிக்கு பலமுறை புகார் அளித்தும் இதுவரை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
அதே போன்று குளத்தின் கரையில் அங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளதும் இதனால் சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேல் உள்ள விவசாய நிலத்தில் விவசாயம் செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்யத்துவங்கிய நிலையில் குளத்தின் கரைகள் ஏற்பட்டுள்ள விரிசல் மற்றும் மதகுகள் சிதலமடைந்த உள்ளதால் தற்பொது பெய்து வரும் மழையின் காரணமாக குளத்திற்கு தண்ணீர் வந்தால் குளம் உடைப்பு ஏற்படுமே என்ற அச்சத்தில் உள்ளதாகவும் இதனால் குளத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கையாக உள்ளது.