கும்பகோணம் செய்தியாளர்
ஆர். தீனதயாளன்
கும்பகோணத்தில் உள்ளரங்க மேட் விளையாட்டு மைதானம்
எம்பி .எம்எல்ஏ ஆகியோர் திறந்து வைத்தனர்….

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரிமியர் ஸ்போர்ட்ஸ் ஜோன் சார்பில் பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ள பாக்ஸ் கிரிக்கெட், கால் பந்து, பேட்மிட்டன் உள்ளிட்ட விளையாட்டுக்கள் அடங்கிய உள்ளரங்க மேட் விளையாட்டு மைதானம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.\இந்நிகழ்ச்சியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் சு .கல்யாணசுந்தரம், கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் முன்னாள் ரோட்டரி சங்க ஆளுநர் பாலாஜி, துணை மேயர் சு.ப.தமிழழகன், நிறுவனர் கௌசிக் ஆகியோர் கலந்து கொண்டு உள் விளையாட்டு மைதானத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் திமுக பொறுப்பாளர்கள் விளையாட்டு வீரர்கள் பயிற்சியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்