தருமபுரி
பொம்மிடி அடுத்த ஏற்கனவே கெமிக்கல் ஃபாக்டரியல் பாதிக்கப்பட்டு வரும் கிராம மக்கள் தற்போது கையில் பதாதைகளை ஏந்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடை வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அடுத்த கோட்டமேடு கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க கட்டிடம் கட்டி வரும் நிலையில் டாஸ்மாக் கடை வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். குறிப்பாக பயர்நத்தம் பகுதியில் செயல்பட்டு வந்த இந்த டாஸ்மாக் கடையானது சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மக்களின் எதிர்ப்பால் அங்கிருந்து கதிரிபுரம் கிராமத்திற்கு மாற்றப்படுவதாக ஏற்பாடு செய்யப்பட்டன, இத்தகவலை அறிந்த கதிரிபுரம் கிராம மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது கோட்டமேடு பகுதியில் விவசாய நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று முடியும் நிலையில், தங்கள் கிராமத்தில் டாஸ்மாக் கடை திறக்க வேண்டாம் என பேனர் அடித்து 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இப்பகுதியில் ஏற்கனவே செயல்பட்டு வரும் கெமிக்கல் பேக்டரியால் தண்ணீர் மாசு ஏற்பட்டுள்ளதாகவும், விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும், கிராமப்புற சாலை என்பதால் இவ்வழியாக பள்ளி குழந்தைகள் மாணவர்கள் பெண்கள் என அனைவரும் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்து எனவே பெண்களின் நலன் கருதி இப்பகுதியில் டாஸ்மாக் கடையை செயல்படுத்தக் கூடாது என வரும் கிராம மக்கள் கையில் பதவிகளை ஏந்தி கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.