திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சி.ம.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிபவர் டி.ஆர்.நம்பெருமாள். இவர் பள்ளி சார்ந்த அனைத்து செயல்பாடுகள் மற்றும் சமூக செயல்பாடுகள் அனைத்திலும் ஈடுபாடு கொண்டவர். இவரது திறன்களை பாராட்டி சென்னை அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை சார்பில் சமூக சேவகருக்கான அறம் விருது வழங்கப்பட்டது.

இயக்குநரும், நடிகருமான கே. பாக்யராஜ் பங்கேற்று விருது மற்றும் சான்றிதழை வழங்கி பாராட்டினார். மேலும் தன்னம்பிக்கை பேச்சாளர் ஈரோடு மகேஷ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர்.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.