தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
கொளத்துப்பாளையம் பேரூராட்சி திமுக மகளிர் அணி செயலாளர் கட்சியிலிருந்து முறைப்படி விலகி தமிழக வெற்றி கழக கட்சியில் 50 மகளிர் உடன் இணைந்து கொண்டார்..
தாராபுரம், நவ 24-
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வடதாரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருப்பூர் கிழக்கு மாவட்டம் தாராபுரம் சட்ட மன்ற தொகுதி சார்பாக தாராபுரம் நகர தலைவர் சார்லி, இளைஞரணி தலைவர் கதிர் தலைமையில், நகர செயலாளர் ரமேஷ் , நகர மாணவரணி தலைவர் எழில் பிரபாகரன் ஆகியோர்களின் முன்னிலையில் கொளத்துபாளையம் பேரூராட்சி திமுக மகளிர் அணி செயலாளர் திருமதி. கீதா மணி அவர்கள் முறைப்படி கட்சியிலிருந்து விலகி இன்று 50க்கும் மேற்பட்ட மகளிர்களுடன் மாற்று கட்சியில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்து கொண்டார், இதில் நகர தொண்டரணி தலைவர் பிரபு , நகர இணை செயலாளர் மின்னல் சிலம்பு, தொண்டரணி இணைச் செயலாளர் தினகரன், மற்றும் சூர்யா, குமார், சுரேஷ், ராஜேஷ், சூர்யா, விக்கி சிவராமன், கோகுல், ராகவேந்திரன் கலந்து கொண்டனர், இதனை மாணவரணி செயலாளர் பிரேம்குமார் ஏற்பாடு செய்திருந்தார்..