மாரத்தான் ஓட்ட பந்தயம்…… வாழப்பாடி உட்கோட்ட காவல்துறை, வாழப்பாடி விளையாட்டு சங்கம், சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சேலம்மாவட்ட தடகள சங்கம் இணைந்து நடத்தும் போதை ஒழிப்பு மற்றும் சமூகநீதி விழிப்புணர்வு மூன்றாம் ஆண்டு பெண்கள் மற்றும் ஆண்களுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது
இந்த போட்டியில்3,5,10,15கி. மீ என நான்கு பிரிவுகளாக வாழப்பாடி சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் இருந்து மாரத்தான் போட்டி நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கபிலேஷ் என்ற சிறுவன் 5 கிலோ மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்று சிறப்பு பரிசு பெற்று அனைவரது பாராட்டையும் பெற்றார்.