புழலில் மெத்தபெட்டமின் வழக்கில் சிக்கிய பெங்களூரை சேர்ந்த இருவர் கைது 64 கிராம் மெத்தபெட்டமின்
6 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் போலீசார் விசாரணை.
செங்குன்றம் செய்தியாளர்
கடந்த வாரம் புழல் பகுதியில் உயர்நீதிமன்ற பாதுகாப்பு காவல் பெண் உதவி ஆய்வாளரின் கணவர் வண்ணாரப்பேட்டை போலீஸ் குடியிருப்பை சேர்ந்த குமரவேல் (வயது 46) புழல் காவாங்கரை பகுதியை சேர்ந்த தீபேஷ் (வயது 24) பார்த்திபன் (வயது 35) , ஓட்டேரியை சேர்ந்த அமீர்பாஷா 23) எஸ். எஸ். புரம் சுபாஷ் (வயது 32) நுங்கம்பாக்கத்தை சேர்ந்த மைக்கேல் (வயது 30) ஆகியோர் என தெரிந்ததது .
இவர்கள் ஆன்லைன் ஆப் மூலம் கல்லூரி மாணவர்களுக்கும் மற்றும் வாடிக்கையாளருக்கும் மெத்தபெட்டமின் விற்பனை
செய்வதற்காக நின்று கொண்டிருந்த போது புழல் தனிப்படை போலீசார் மூலம் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு மெத்தம்பட்டமின் சப்ளை செய்வதை தொடர்ந்து தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்தனர்.
இந்நிலையில் அதே பாடி பகுதியில் சந்தேகப்படும்படி திரிந்த இரு நபர்களை போலீசார் விசாரித்ததில் அவர்கள் தஞ்சாவூர் , ராமலிங்கபுரம் ரெட்டி பாளையத்தை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 41) பெங்களூர் ,;ஏலகங்கா நியூ டவுனை சேர்ந்த கோவர்ததன ரெட்டி, (வயது 39,) ஆகியோரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் விசாரணையில் இவர்கள் சென்னையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து பெத்த பெட்டமின் விற்பனை செய்ய வந்ததாக தெரியவந்தது. பின்னர் இவர்களிடம் இருந்த 64 கிராம் மெத்தபெட்டமின் மற்றும் 6 லட்சம் ரூபாய் பணம் மூன்று செல்போன்களையும் பறிமுதல் செய்து , புழல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
மேலும் தொடர்ந்து இதுபோல் போதை வஸ்துக்களை விற்பனை நபர்களை கூண்டோடு பிடிக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் தனிப்படை போலீசார் பல திடுக்கிடும் தகவல்களை திரட்டி
சென்னையில் போதை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்க கைது நடவடிக்கையில் மேற்கொண்டு வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிடிபட்ட மெத்தபெத்தடமின் சந்தையின் மதிப்பு சுமார் 4 லட்சம் என கூறப்படுகிறது.