புட்டி ரெட்டிபட்டி ஸ்ரீ சோமசுந்தரி உடனுறை சோமேஸ்வர சுவாமி திருக்கோவிலில் கால பைரவர் ஜென்மாஷ்டமி உற்சவ விழா மகா யாக பூஜை.
கடத்தூர். நவ 24.
கடத்தூர் அடுத்த புட்டி ரெட்டிபட்டி ஸ்ரீ சோமசுந்தரி உடனுறை சோமேஸ்வரர் திருக்கோவிலில்
அமர்ந்து அருள் பாலித்து ஸ்வாமி ஸ்ரீ பிரம்ம , பைரவர் ஆலயத்தில் அஷ்ட பைரவ மஹா யாகம் நடைபெற்றது.
கார்த்திகை மாதம் வரக் கூடிய அஷ்டமி ஜென்மாஷ்டமியை எனவும் காலபைரவாஷ்டமி என பெயர் பெற்றது.
அதனையொட்டி வருடாந்தோறும் மூன்று நாட்கள் நான்கு கால மஹா யாகமாக நடைபெறுவது வழக்கம் .அதன் படி இந்த வருடம் கார்த்திகை மாதம் 6,7,8ந்தேதியான 21.11.2024 முதல் 23.11.2024 வியாழன், வெள்ளி, சனி கிழமை மூன்று தினங்கள் நான்கு கால யாக பூஜைகளாக நடைபெற்று மஹாபூர்ணாஹூதி நடைப்பெறும் மேலும் அஷ்டபுஜ கால பைரவருக்கு மஹா அபிஷேகம் நடைபெறும் அதன் படி நேற்று இரவு முதல் கால யாக பூஜை நடைபெற்று அஷ்ட புஜ கால பைரவருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்து உற்சவ மூர்த்தி வீதியுலா காட்சியும் நடைபெற்று மஹா தீபாராதனை நடைபெற்றது.