திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நல்லூர் ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஆர். கலையரசி ரங்கராஜன் தலைமை வகித்தார். ஒன்றிய குழு உறுப்பினர் வீ. அன்பரசன் முன்னிலை வகித்தார்.இக்கூட்டத்தில் கிராம சபை கூட்ட பற்றாளர் சண்முகசுந்தரம், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எம்.விமலா ராணி, ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் ஆர். உஷா, கே.மணி, கே. துரைராஜ், ஏ. சோமசுந்தரம்,எஸ். வள்ளி, ஏ. சரோஜா,சி. சௌந்தர்ராஜன்,சு. பிரியதர்ஷினி, ஊராட்சி செயலாளர் எம். சிவ சங்கரன் மற்றும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் நல்லூர் ஊராட்சியில் மயான சாலை அமைத்தல், அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள், 15-ஆவது நிதிக்குழு பணிகள், ஊராட்சியின் அடிப்படைத் தேவைகள் மற்றும் சாலை வசதி, குடிநீர் வசதி போன்ற பணிகள் குறித்து ஆலோசனைகள் நடத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.