தர்மபுரி மாவட்டம் கடத்தூர் யூனியன் உட்பட்ட கடத்தூர் வே புதூர் புட்டி ரெட்டி பட்டி தாளநத்தம் நொச்சிக்குட்டை கந்தகவுண்டனூர் பசுவபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக ஃபெஞ்சில் புயல் காரணமாக கனமழை பெய்தது இதனால் விவசாய விளைநிலங்களில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஏக்கர் அளவில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர், கரும்பு, மக்கா சோளம் ,மரவள்ளி கிழங்கு, சோளம். ராகி, கம்பு உள்ளிட்ட பயிறு வகைகள் தண்ணீர் நின்று அழுகும் நிலையில் உள்ளது

தற்போது அறுவடைக்கு தயார்நிலையில் இருந்த விளைந்த கதிர்களை அறுவடை செய்யும் நிலையில் கன மழை பெய்ததால் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது எனவே இப்பகுதி விவசாயிகளுக்கு அரசு சார்பில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை
இதுகுறித்து இப்பகுதி சேர்ந்த விவசாயிகள் கூறுகையில்
மழைக்காலங்களில் ஏரிக்கு நிரம்பும் , ஏரி கால்வாய்கள் முறையாக தூர் வாரப்படாமல் பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது இதனால் ஏரிக்குச் செல்லும் தண்ணீர் விலை நிலங்களுக்குச் சென்று கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது, இனிவரும் காலங்களில் ஏரிக்குச் செல்லும் கால்வாய்களை தூர் வரவும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்