வேப்பூர்
தமிழகத்தில் நேற்று முன்தினம் வந்த ஃபெஞ்சால் புயலால் தமிழகம் முழுவதும் பெரும் சேதம் ஏற்பட்டது
கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுகாவிற்குட்பட்ட பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது

வேப்பூர் தாலுகாவிற்குட்பட்ட நல்லூர் நகர் சேப்பாக்கம் மேமாமத்தூர் பெரியநெசலூர் சித்தூர் பா.கொத்தனூர் விளம்பாவூர் சிறுநெசலூர் குறி்ச்சி பூலாம்பாடி காளியாமேடு நிராமணி மாளிகைமேடு அடரி மாங்குளம் சிறுபாக்கம் பொயனப்பாடி மங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் 50 க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்த நிலையில் மக்காச்சோளம் உளுந்து நெல் மரவள்ளி வரகு போன்ற பயிர்களில் மழைநீர் தேங்கி நின்றதால் பயிர்கள் வீணாகியது இதனை கண்ட விவசாயிகள் பெரும் வேதனை அடைந்தனர்
பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் பயிர்களை கிராம நிர்வாக அலுவலர்கள் வருவாய் ஆய்வாளர்கள் பார்வையிட்து வட்டாட்சியருக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் தகவல் அளித்தனர்