கழுத்தில் வேப்பிலை மாலை… கையில் அக்னிசட்டி பரபரப்பான தூத்துக்குடி அரசு மருத்துவமனை
தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் கழுத்தில் வேப்பிலை மாலை அணிந்து கையில் அக்னிசட்டி ஏந்தியவாறு
ஓம்சக்தி! பராசக்தி! ஆதிசக்கி ஓம்! என ஆன்மீக பாடல் கோஷங்களை எழுப்பியவாறு, தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்திற்கு சிலர் வரவே பதட்டத்துடன் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்த தகவல் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்திற்கு முன் கூட்டியே கிடைக்க பெற்றதால், உடனடியாக காவல் ஆய்வாளர் தலைமையில் ஒரு போலீசார் டீம் அங்கு நின்றிருந்த நிலையில், அவர்களை தடுத்து நிறுத்தி விபரம் கேட்டறிந்தனர்.
மதவாத பிரிவினை வாதத்தை வேண்டும் என்றே எழுப்புகிறதா? இந்து மக்கள் கட்சி..!
அவர்கள் கூறியதாவது, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவசர சிகிச்சை பிரிவு, உள் நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகள் போன்றோர்களின் நோய் பூரணமாக குணமாகிட சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு இந்து மக்கள் கட்சியின் சார்பாக ஸ்ரீ முத்தாரம்மன் தாயை வணங்கி, அவர்களது அருள்பெற்று விபூதி ( திருநீறு ), ஸ்லோகங்கள் புத்தகங்கள், துளசி தீர்த்தம் மற்றும் சந்தனம், குங்குமம் போன்றவைகளை வழங்க வந்துள்ளோம் என்றனர்.
அப்போது, காவல் ஆய்வாளர்
“இது போன்ற நடைமுறைகளுக்கு அரசு மருத்துவமனையில் அனுமதி இல்லை. ஆகவே இது கூடாது என மருத்துவமனைக்குள் நுழைந்த இந்து மக்கள் கட்சியினரை தடுத்து நிறுத்தினார்”. ஆனால், இந்து மக்கள் கட்சியினரோ, ” தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட மதத்தினர் ( கிறிஸ்துவம் ) இங்குள்ள நோயாளிகள் குணமடைய பிராத்தனை பன்னுவதாக கூறி மருத்துவமனையில் புகுந்து மறைமுகமாக மதமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர். இதனை தடுக்கும் விதமாகவும், இதனை கண்டிக்கும் விதமாகவும் இது போன்ற நடவடிக்கையில் நாங்கள் இன்று ஈடுபட்டுள்ளோம் என்று பதில் கூறினார்கள்.
பின்னர், உங்கள் கோரிக்கைகள், பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் அது தொடர்பாக தூத்துக்குடி அரசு மருத்துவமனை முதல்வரிடம் சட்டத்திற்கு உட்பட்டு முறையான அனுமதியுடன் மனு அளிக்கலாம் என காவல் ஆய்வாளர் தெரிவித்தார். பின்னர் இது தொடார்பாக அவர்கள் மருத்துவமனை முதல்வரிடம் மனு அளித்து விட்டுச் சென்றனர்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் கழுத்தில் வேப்பிலை மாலை அணிந்து கையில் அக்னிசட்டி ஏந்தியவாறு திடீரென சிலர் வந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது