திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா..


திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் 94 பயனாளிகளுக்கு 79 லட்சத்து 16 ஆயிரத்து 714 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் ஆகியோர் வழங்கினார்கள் மாவட்ட ஊராட்சித்தலைவர் தலையாமங்கலம் பாலு என்ற கோ.பாலசுப்ரமணியன் உடனிருந்தார்.


நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது
தமிழக அரசானது மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் மாற்றுத்திறனாளிகள் அவர்களுடைய தனித்திறமைகளான ஓவியம் கைவினைப்பொருட்கள் தயாரித்தல் தையல் கலை உள்ளிட்ட பல்வேறு திறமைகளை வெளிகொணர்ந்துள்ளனர் மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொருவருக்கும் தனித்திறமை உள்ளது மாற்றுத்திறனாளி நபர்கள் அனைவரும் தங்களது திறமைகளை முறையாக பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும்மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 515 மாற்றுத்திறனாளி நபர்கள் மனு அளித்திருந்தனர்

மனுக்கள் முறையாக பரிசீலினை செய்யப்பட்டு 413 மனுக்கள் ஏற்கப்பட்டு மனுக்களின் கோரிக்கை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது
மேலும் எனவும் நடைபெற்ற உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் 36 நபர்களுக்கு 36 லட்சத்து 64 ஆயிரத்து 800 மதிப்பிலான பெட்ரோல் ஸ்கூட்டரும், 8 பயனாளிகளுக்கு 91 ஆயிரத்து 560 மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிளும் 34 லட்சத்து 23 ஆயிரத்து 200 மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி 3 பயனாளிகளுக்கும் ஒரு பயனாளிக்கு ஆயிரத்து 800 மதிப்பிலான சக்கர நாற்காலியும் இரண்டு பயனாளிக்கு 17 ஆயிரத்து 800 மதிப்பிலான மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சக்கர நாற்காலியும் 17 பயனாளிகளுக்கு ஒரு லட்சத்தி 16 ஆயிரத்து 250 மதிப்பிலான மோட்டர் பொருத்திய தையல் இயந்திரமும், மூன்று பயனாளிகளுக்கு இரண்டு லட்சத்து 65 ஆயிரத்து 300 மதிப்பிலான செயற்கை கால்களும், நான்கு பயனாளிகளுக்கு ஏழு ஆயிரத்து 24 மதிப்பிலான பார்வையற்றோருக்கான கைக்கடிகாரமும் 20 பயனாளிகளுக்கு மூன்று லட்சத்து 23 ஆயிரத்து 980 மதிப்பிலான ஸ்மார்ட்போன்களும் உள்பட 94 பயனாளிகளுக்கு 79 லட்சத்து 16 ஆயிரத்து 714 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தெரிவித்தார் நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா திருவாரூர் நகர மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில் திருவாரூர் ஒன்றிய பெருந்தலைவர் தேவா நீடாமங்கலம் ஒன்றிய பெருந்தலைவர் சோம.செந்தமிழ்செல்வன் பணிநியமன குழு உறுப்பினர் பிரகாஷ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *