கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520.
கொலை சம்பவத்தை கண்டித்து விவசாயி சங்கத்தினர் நடத்திய போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு……
போலீசார் மற்றும் விவசாயிகளுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு……
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த செம்மலை கவுண்டம்பாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் குற்றவாளிகளை விரைவாக கைது செய்ய கோரியும் பல்லடம் அவிநாசி பாளையம் சுங்கம் பகுதியில் விவசாயிகள் சார்பில் மாபெரும் போராட்டமானது நடைபெற்றது இதில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்
இந்த நிலையில் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி இல்லை எனக் கூறி அவிநாசி பாளையம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் மேலும் விவசாயிகள் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அங்கிருந்து களைந்து சென்றனர்.