உழவர்கரை தொகுதி மூலக்குளம் வசந்த ராஜா தியேட்டர் அருகே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமமுக இணை செயலாளர் லாவண்யா தலைமையில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

புயல் காற்று,மழை, வெள்ளத்தால் உழவர்கரை தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மரங்கள் விழுந்தும், வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தும், வீடுகள் இடிந்தும் பெரும் பாதிப்பு ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது.

இதனை அடுத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆணைக்கினங்க, எஸ்.டி. சேகர் அறிவுறுத்தலின்படி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மூலக்குளம் வசந்த ராஜா தியேட்டர் அருகே பாதிக்கப்பட்ட பகுதிகளை புதுச்சேரி அமமுக இணைச் செயலாளர் லாவண்யா நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து தருவதாக உறுதி அளித்தார்.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாய், போர்வை, தலையணை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார். மேலும் மதிய உணவும் வழங்கப்பட்டது. அம்மா மக்கள் முன்னேற்ற கழக இணைச்செயலாளர்
லாவண்யா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.