ஃபெஞ்சல் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட அரும்பார்த்தபுரம், தக்ககுட்டை, பிச்சைவீரன் பேட் உள்ளிட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு அமமுக இணை செயலாளர் லாவண்யா அன்னதானம் வழங்கினார்.

புதுச்சேரியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வரலாறு காணாத கடும் மழை பொழிவு மற்றும் ஃபெஞ்சல் புயல் காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்வாதாரங்களை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆணைக்கிணங்க, புதுச்சேரி மேற்கு மாநில கழக செயலாளர் எஸ் டி சேகர் அறிவுறுத்தலின்படி, நேற்று இரண்டாவது நாளாக புயல் மழையால் பாதிக்கப்பட்ட உழவர்கரை தொகுதி தொகுதிக்கு உட்பட்ட அரும்பார்த்தபுரம், தக்ககுட்டை, பிச்சைவீரன் பேட் உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மேற்கு மாநில இணைச் செயலாளர் லாவண்யா ஏற்பாட்டில் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் மதிய உணவு வழங்கினார்.
மேலும் இணைச்செயலாளர் லாவண்யா பேசுகையில் உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் என்னை எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம் என்று மழையால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களிடம் கூறினார். இதில் கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.